Friday, February 21, 2025

இறுதி பரிசு

இதயத்தை இறுக்கியே 

        இறங்கிடும் வெறுமையை

உயிரினுள் உருகியே 

        உதிர்ந்திடும் வலிகளை 

இமைகளின் இடையுனுள் 

        இருதுளி வெம்மையை

மதி மரத்திடும் 

        மனமதின் பிரிவினை

உன் பரிசென 

        மௌனமாய் ஏற்கிறேன்...

உன் நினைவையும் 

        புதையலாய் காக்கிறேன்...

Saturday, January 21, 2017

உலக அரசியல் உணர்ந்திடுவோம்

அன்புள்ள மகனுக்கு அன்னையின் கடிதம்










இயற்கையின் கொடையும்
இறைவனின் அருளும்

உன்னுள் மலர்ந்து
உலகை எழுப்பட்டும்

ஆராய நேரமில்லா
(என்) அவசர உலகத்தில்

கடமைககோர் வேலையென்று
கழித்திருந்த காலத்தில்

இவையில்லை என்வாழ்வு
இயம்பி வந்தவனே

எனைப்பேணா திருந்தாலும்
உனைஎன்றும் விடுவேனோ

உனக்காக ஒவ்வொன்றும்
சலித்து தேர்ந்தேன்

தேடல் சொன்னது
பணவெறியின் உச்சத்தை

குழந்தையின் எண்ணையில்
எரிபொருளின் சக்கை

உள்ளும் புறமும்
ஒப்பனையுடன் பழங்கள்

பின்விளைவை பணபலத்தால்
வாங்கிய மருந்துகள்

அடக்கவிலை கொள்விலை
எதிலும்சேரா சமையல்எண்ணை

வெவ்வேறு தரங்களில்
கல்விவிற்கும் அரசாங்கம்








இன்னும் இன்னமும்
மறைக்கப்பட்டவை இருக்கக்கூடும்

இவையெல்லாம் போதாதென்றா
தமிழ்க்குலத்தில் பிறந்தோம்

தமிழனுக்கு முன்னால்
இந்தியனை வைத்தோம்

நடுக்கடலில் யாரேனும்
சுட்டுக் கொன்றாலும்

மொழியறிவை சிதைக்க
அரசே முயன்றாலும்

குலப்பெருமை சான்றுகளை
மண்ணிட்டு மறைத்தாலும்

மறைந்தஎம் சான்றோரின்
நினைவையும் கொன்றாலும்

பஞ்சத்திலும் வெள்ளத்திலும்
தடுமாறி நின்றாலும்

இந்தியன் என்றே
எம்மை அறிவித்தோம்

இன்று

அந்நியன் ஒருவன்
மஞ்சுவிரட்டை மறுக்கிறான்

இயற்கை இனங்களை
மறக்கடிக்க நினைக்கிறான்.












மிஞ்சியே செலவிட்டும்
கொஞ்சமே பலன்தந்தும்

பெருமையாய் வீரமாய்
குடும்பமாய் காளைகளை

வணங்கி விழாஎடுத்து
காத்திடல் நம்கடன்

கடமையை குரூரமாய்
அழித்திட வெறியர்கள்

மெய்முகம் மறைத்து
முயற்சியை தொடங்கையில்

இந்தியா மலர்தூவி
வழிவிட்டு வரவெற்று

கோதாவில் எங்களை
வலுவில் தள்ளயில்

துரும்பையும் கிள்ளாமல்
வேடிக்கை பார்க்காதே

விழித்திடு இந்தியனே
இணைத்திடு எம்முடன்

இன்று என்நிலை
நாளை உன்நிலை

தாங்கிட தேவையன்றி
தானாக நிமிர்ந்து

முதிர்வின் ஞானம்கொண்டு
இளைமையின் வேகம் கொண்டு

பண அரசியல்அடிவாரத்தை
முற்றிலும் தகர்த்திடுவாம்

உலகுக்கு அறிவிப்போம்
ஓநாய்கள் தந்திரத்தை

கலங்காதே என்மகனே
தமிழ்மரமே தாய்மரபு

உன்தாயும் தமிழ்த்தாயும்
அரணாய் உடனிருப்போம்...
-அன்புடன் அம்மா

Thursday, August 29, 2013

நினைவுகளின் பயணங்கள்


உன்னாலே தானே முதல்முறை துளிர்த்தேன்.. 
 
உனக்காகத் தானே உயிர் எல்லாம் பூத்தேன்.. 
 
உன் சுவாசம் சேர்க்க காற்றெல்லாம் அளைந்தேன்.. 
 
உன் நேசம் தேடியே உலகையே துளைத்தேன்.. 
 
உன் ஒளி தீண்டியே என்னையே உணர்ந்தேன்.. 
 
அடிவேரில் வெந்நீரும் 
 
     இதயத்தின் கண்ணீரும் 
 
           தந்தாயே முதன்முறை!!!.. 
 
என்றாலும் ஜீவனுள்
 
          உன் நிமிடங்களின் தடயங்கள்!!!..

Saturday, June 8, 2013

எனக்கான சூரியன்


சூரியன்  முகம் பார்த்தே தாமரை மலருமாம்..

நீ நம்பவில்லையா?

ஒருநாள் சிரித்துக்கொண்டே என் முகம் பார்

நிச்சயம் நம்புவாய் :)..
 
எனக்கான ஆதாரம் நீயேதான்  என்று..

Monday, February 18, 2013

அன்புச் சிறை

சின்ன சிரிப்பில்
   சிக்கிய சிந்தையும் 
ஒற்றை பார்வையில்
   வீழ்ந்த கண்களும் 
கனிந்த பேச்சில்
   கவிழ்ந்த இதயமும் 
மீண்டு வரவே
   விரும்ப வில்லையாம்...


உன் கேசம் கோதி

சிறைபட துடிக்கும் 

என் விரல்கள் போல!!!

Tuesday, September 13, 2011

உன் பார்வையில்

உன் உதடுகள் அசைவதைக் கொண்டே 
நீ என்னிடம் பேசுவதை உணர்கிறது 
உன் விழிகள் தீண்டிய கணமே 
நின்று போன என் உலகு.. 

Thursday, June 9, 2011

தொலைந்து போ அன்பே

பார்வைகள் தீண்டா தொலைவிலும்
       நீ நினைவுகளால் சுடுவதென்ன!!
வெளியில் துரத்தி வழிமறித்தாலும்
       உயிரில் பூக்கும் மாயமென்ன!!
கனவில்
    கவிதையில் தொலைந்த பிறகும்
        நீயென் முழுமையாய் நிறைவதேன்ன!!